ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கலைஞர் நகர் பகுதியில் கடந்த 30ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று இரவு 30 க்கு மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கத்தி, பெட்ரோல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்து பெண்களை ஆபாசமாக பேசி உள்ளனர். இது குறித்து கலைஞர்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று நண்பகல் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.