திருப்பத்தூர் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் ஆடிவிழா கடந்த 29ம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கி முளைப்பாரி போடப்பட்டது. கோவிலில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை எடுத்துசென்று திருத்தளிநாதர் ஆலயம், வீரமாகாளியம்மன் கோயில், பூமாயி அம்மன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் வழிபாடு நடத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக புனித சீதளி குளத்தில் மதுகுடங்களை கரைத்தனர்.