மகாராஷ்டிரா மாநிலம், லக்னோவில் ரிங் டென்னிஸ் போட்டி கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெற்று உள்ளது.இந்த போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 12 மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் உட்பட 4 மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 26 பேர் அந்த போட்டியில் கலந்து கொண்டு உள்ளனர். அதில் சீனியர் மற்றும் சப் ஜூனியர் கோப்பைகளை பெற்று அதோடு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர் உற்சாகம் அடைந்த உறவினர்கள் லக்னோவில் இருந்து ரயிலில் வந்தவர்களுக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.