திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த சதாம் உசேன் என்பவரின் மூன்று வயது குழந்தை முகமது ரைஹான் . முகமது ரைஹான் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ரைஹானை தெரு நாய் கடித்து காயப்படுத்தியது. முகமது ரைஹானின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் நாய்களை விரட்டி குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.