சூராணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காவிரி குண்டாறு திட்டத்தை விரிவுபடுத்தி சூராணம் பகுதியும் பயன்பெறும் வகையில் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சூராணத்தில் பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா துணைத் தலைவர் சந்தியாகு தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் முத்துராமு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கொடியினை ஏற்றினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.