இந்திய சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் 68வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையிலும் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையிலும் கருத்துரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் தமிழரசன் தலைமையிலும் புதிய தமிழகம் கட்சி சார்பில் அதிக்குமார் தலைமையிலும் மற்றும் பலர் மரியாதை செலுத்தினர்