குன்றக்குடியில் குன்றக்குடி ஆதீன மடத்தின் 700வது குருபூஜை மற்றும் தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் அருளாலய குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் எழுதிய "பொன்மணிக் கதிர்கள்" நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சுந்தர ஆவுடையப்பன், மாணிக்கவாசகம், பொதுமக்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.