எட்டையாபுரம் அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் பட்டாசு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பேருந்து நிறுத்தம் முன்பு கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கோட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலை அமைக்க கூடாது எனவும் மேலும் அமைக்கும் பட்சத்தில் பட்டாசு ஆளையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்