திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று காலை தொடங்கி மாலை வரை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவெற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் தாலுக்கா நீதிமன்றங்களில் நடைபெற்றது.மொத்தமாக 8670 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 4436 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.26 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 170 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.