திருப்பத்தூர் மாவட்டத்தில் கோட்டைதெரு முதல் இத்கா மைதானம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் குதிரை, ஒட்டகம் உடன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தில் தொழுகையில் ஈடுபட்டனர்.இதில் சிறுவர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.மிலாடி நபி தினத்தில் திருப்பத்தூரில் ஒட்டகம் மற்றும் குதிரையுடன் ஊர்வலமாக சென்ற நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.