திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலைப் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன. முன்பு தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் இருந்த பலகைகளில், புதிய சாலைப் புனரமைப்புக்குப் பின் இந்தி சேர்க்கப்பட்டது. காட்டாம்பூர், தானிப்பட்டி உள்ளிட்ட ஊர்களின் பலகைகளில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டு, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், நேற்றிரவு இந்த செயல் நடந்து, இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.