மின் கசிவால் வீடு எரிந்து சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட முதியவர் மலையனுக்கு எம்எல்ஏ செந்தில்குமார் ஆறுதல் கூறினார். இன்று சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும், முதியவருக்கு அரசு தொகுப்பு வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார்.