வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலையில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசுமாட்டை இன்று மாலை வீட்டிற்கு அழைத்து சென்றபோது மழைநீர் கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப் உடைந்து பசுமாடு கால்வாயில் விழுந்தது. தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.