தெலுங்கு மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துரைபாண்டி என்பவரும் அவரது நண்பர் விக்னேஷ் என்பவரும் இருசக்கர வாகனத்தில் காக்கங்கரை நோக்கி சென்றபோது பல்லளப்பள்ளி அருகே எதிரே அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் இருவரும் படுகாயத்துடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தலை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனம் ஓட்டிய துரைப்பாண்டிக்கு சிறுநீரகம் நசுங்கி போனதால் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.