சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரண்மனைப்பட்டியில் உள்ள ஸ்ரீ குருந்துடைய அய்யனார் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. புனித நீர் யாக பூஜைகளுடன் கலசத்தில் அடைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியத்துடன் கோபுரத்திற்கு வலம் வந்தனர். கருட பகவான் வரவேற்கப்பட்டு, புனித நீர் கோவில் கும்பத்தில் ஊற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அருள்பிரசாதம், அன்னதானம் பெற்று சாமி தரிசனம் செய்தனர்.