வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியில் வழக்கறிஞர் வீட்டில் பணி செய்த பணிப்பெண் 39 சவரன் தங்க நகையை திருடி சென்ற நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 161/2 சவரன் தங்கநகையை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குபதிவு செய்து நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.