சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 46-ஆம் ஆண்டு திருவிழா செப்.5-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்.7 அன்று அன்னையின் பிறப்புப் பெருவிழாவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், மின்னொளி அலங்கார ரதத்தில் அன்னை சொரூபம் ஏற்றி தேர் பவனி வந்தது. திண்டுக்கல் சாலை, பேருந்து நிலையம் வழியாக பவனியில் அருட்சகோதரிகள் ஜெபம் பாடினர். சிங்கம்புணரி, தெக்கூர் உள்ளிட்ட இறைமக்கள் பங்கேற்றனர்.