அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தமிழக அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்திட்ட வளாகம் என்ற திட்டத்தின் பேரில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டு, புதிய பக்தர்கள் தங்கும் விடுதிகள் , மற்றும் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள் மற்றும் மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் பக்தர்கள் காத்திருப்பு அறை, உள்ளிட்டவை பணிகள் நடைபெற்று வருகிறது அதில் முதல் கட்டப்பணியாக ஒரு கோடியை 22 லட்சம் மதிப்பில் பஞ்சாமிர்தம் விற்பனை கூடத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்த வைத்தார்