ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகள் குறித்தும் , கரூரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ,பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.