ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் மாலை வேளைகளில் உலக நன்மை வேண்டி பூஜைகள் நடத்தி சமுத்திரத்திற்கு ஆரத்தி காட்டி வழிபட்டு வருகின்றனர், இந்த நிலையில் ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு சேது சமுத்திர ஆரத்தி குழு சார்பில் மாலை 6.30க்கு தொடங்கி சமுத்திர வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கலசம் வைத்து கலசத்தில் புனித நீர் ஊற்றி பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடல் அன்னைக்கு பால், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியம் மற்றும் மலர் மாலை தூவி வழிபட்டனர்