திருப்பத்தூர் அருகே தவெக கட்சி பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் நடந்த தவெக மாநாட்டை முன்னிட்டு, திருப்பத்தூர் பேருந்து நிலையம், காலேஜ் ரோடு, சிவகங்கை ரோடு, மதுரை ரோடு ஆகிய இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மர்ம நபர்கள் அவற்றை கிழித்து தொங்கவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.