சின்னாளபட்டி சத்யா நகர் அருகே 13வது வார்டுபகுதியில் கஸ்தூரிபா மருத்துவமனை சாலையில் அருந்ததயினர் சமுதாய மக்களுக்கு என தனி மயானம் உள்ளது. இதில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தி அதில் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து வந்தது. குறிப்பாக பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சொந்தமான இந்த மயானத்தில் குப்பைகளை குவித்து வருவதற்கு சமூக ஆர்வளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்