கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகளை கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் வனப்பகுதியில் தலா மூன்று பேர் கொண்ட குழு ஆறு குழுவாக பிரிந்து யானைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேட்டுப்பாளையம் வனச்சரவை அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மேற்பார்வையில் 126 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்