சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 79வது சுதந்திர தினத்தையொட்டி நேதாஜி அறக்கட்டளை சார்பாக தென்மண்டல சிலம்பம் போட்டி நடைபெற்றது. 600+ மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள், தற்காப்பு கலைகளை அசத்தலாக காட்டினர். தீப்பந்தம் கொளுத்தி சாகசம் செய்தவர்களை பார்வையாளர்கள் பாராட்டினர். மதுரை, திருச்சி குழுக்கள் முதல் மூன்று பரிசுகளை வென்றன.