சென்னை அம்பத்தூர் தொழில் பேட்டை பிரதான சாலையில் திடீரென 3 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட பள்ளம் ஒன்று ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை மூடுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். பின்னர் உடனே ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளத்தை அரை மணி நேரத்தில் மண் மற்றும் கற்களை கொட்டி மாநகராட்சி ஊழியர்கள் சீர்படுத்தினர்.