சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ஏழுகோட்டை சிறுகை கிராமத்தில் ஸ்ரீ அழகிய பொன்னாள் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. செப்டம்பர் 3ம் தேதி கணபதி ஹோமம், மகாலெக்ஷ்மி ஹோமம், அஸ்திர ஹோமம், பிரதிஷ்டை உள்ளிட்டவை நடந்தன. 4ம் தேதி திரவ்யாகுதி, பூர்ணாகுதியுடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருட்பிரசாதம், அன்னதானம் பெற்றனர்.