திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த குதிரையாறு அணை பகுதியில் அஞ்சல் துறை சார்பில் புதிய தபால் நிலையம் திறக்கப்பட்டது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு புதிய தபால் நிலையத்தை துவக்கி வைத்தார். வனப்பகுதியை ஒட்டி பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் வசிக்கக்கூடிய பகுதியில் நீண்ட நாட்களாக தபால் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அஞ்சல் துறை புதிய தபால் நிலையத்தை துவக்கியுள்ளது.