மண்டபம் மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மரைன் போலீசார் மண்டபம் வடக்கு கடற்கரை ஓரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மரைன் போலீசார் வருவதை அறிந்த இருவர் தங்கள் வைத்திருந்த இரண்டு பிளாஸ்டிக் கேன்களை கடற்கரை ஓரமாக விட்டு விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் அதனை எடுத்து சோதனை செய்தபோது அதில் 80 கிலோ பதப்படுத்தப்பட்ட நிலையில் கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.