திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரால் வாகனத் தணிக்கையின் போது சித்ரா என்பவரிடமிருந்து 80,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பணத்திற்கு இன்று சித்ரா முறையான ஆவணங்களை காட்டினார். அதன் பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை இன்று திருப்பி வழங்கினார்.