வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லை பகுதியை ஒட்டியுள்ள புல்லூர் பாலாற்று தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் பாலாற்று தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தடையை மீறி பொதுமக்கள் பாலாற்றில் இறங்கி குளிக்கும் வீடியோ இன்று மாலை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.