திண்டுக்கல் நகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர். மேலும் நகரின் மையப் பகுதியான வெள்ளை விநாயகர் நான்கு ரோடு பகுதியில் வணிகர்களின் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் கடைகளை அடைத்து செல்லும் நிலை ஏற்பட்டது.