சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மறைந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் செ.மாதவனின் 92-வது பிறந்தநாள் விழா அவரது பள்ளியில் கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் நிகழ்வை சிறப்பித்தனர்.