பெரம்பலூர் அருகே செட்டிகுளத்தில் கஞ்சா விற்பனையை தட்டி கேட்டு போலீசில் புகார் கொடுத்ததால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராசுவை கஞ்சா விற்பனை கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர்,இதில் அவர் படுகாயமடைந்தார், இதனை கண்டித்து பொது மக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்,இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது