கடந்த சில தினங்களாக கொடைக்கானல் பகுதியில் மழை பெய்து அதன் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருகில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்து வந்த நிலையில் தற்போது நீர் வரத்து சீரானதை தொடர்ந்து கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது