பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பழனி மலைக் கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், நவவீரர்கள் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. மலைக்கோவிலில் 9 நாட்கள் தங்க தேர் புறப்பாடு நடைபெறாது 2.10.2025 அன்று வழக்கம் போல தங்கரத புறப்பாடு நடைபெறும் என அறிவிப்பு