பரமக்குடி அருகே நென்மேனி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கோவிந்தராஜுவின் மனைவி யமுனா, 55,. அவரது மகள் ரூபினி,30,. கார் ஓட்டுநர் காளீஸ்வரர்,29,. ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோவிந்தராஜனும் உயிரிழந்தார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் தந்தை என மூவர் உட்பட நால்வர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது