சென்னை மெரினா உழைப்பாளர் சிலை முன்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருபத்துக்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் இதை அடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர் இதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்