பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த தம்பதி மதன் - சங்கீதா. இவர்களுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் உடற்பயிற்சி பிட்னஸ் சென்டர் நடத்தி வருகின்றனர். மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கமுதகுடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் கால்வாய் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குகா பின் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்