உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள சுயம்புவராஹி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். இவ்வாறு வந்த ஏராளமான பெண் பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக வைக்கப்பட்டு இருந்த அம்மியில் மஞ்சள் அரைத்து அதை அம்மனுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்தனர். மேலும் கோவிலில் ஏராளமான பெண் பக்தர்கள் தீப விளக்கேற்றி தரிசனம் செய்தனர். ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி வராஹிஅம்மனுக்கு பால், பன்னீர், திரவியம், மஞ்சளால் அபிஷேகம் நடைஅபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை பூஜை நடைபெற்றது.