பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார், இவர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி செட்டிகுளத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார், அப்பொழுது அதே ஊரை சேர்ந்த சிலம்பரசன் (34) என்பவர் அருண்குமார் மோட்டார் சைக்கிளை திருடி உள்ளார். இதனை கண்ட அருண்குமார் மற்றும் பொதுமக்கள் அவரை பிடித்து பாடலூர் போலீசில் ஒப்படைத்தனர்.