வாணியம்பாடி மற்றும் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள கிளை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து பாலாற்றில் கலப்பதால், அம்பலூர் கொடையாஞ்சி இராமநாயக்கன் பேட்டை, ஆவரங்குப்பம் உள்ளிட்ட பகுதியிலுள்ள பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது,இதன் காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இது குறித்த செய்தி இன்று காலை சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.