கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்த ஜான்பாபு, இவரது மனைவியின் தகாத உறவால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர் இதனால் கணவன் மனைவி விவாகரத்து மனு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்பாபு மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் தகாத உறவு குறித்த வீடியோ மற்றும் ஆடியோ கணவர் ஜான்பாபுவிடம் சிக்கி உள்ளது. அந்த ஆதாரத்தை அழித்திட வேண்டும் என்று தகாத உறவில் ஈடுபட்ட வாலிபர் ஆதிஷ் ஆண்டனி உறவினர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது