மதுரையைச் சேர்ந்தவர் விஜயராஜா (40) ஆக.4-ம் தேதி இரவு, மதுரை நகைக்கடை வியாபாரிகளிடம் வாங்கிய 1.5 கிலோ தங்கக்கட்டியின் தரத்தை கூட்டுவதற்காக சிவம் திரையரங்கு அருகே நடந்து சென்றபோது தாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறி காரில் ஏற்றி 1.5 கிலோ தங்க கட்டியை பறித்து சென்றனர். விசாரணையில் தன்னுடன் பணிபுரியும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அபிமன்யு (எ) மனோஜ் (35) தனது நண்பர்களை சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடிக்க வைத்து தங்க கட்டியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.