சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, கணபதிபட்டி ரேஷன் கடையில் மோசமான அரிசி வழங்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குப்பை அரிசி, வாசனையுடன் இருப்பதால் சிறுவர்கள் சாப்பிட மறுக்கின்றனர். இதனால் வாங்கிய அரிசியை உண்ண முடியாமல் மக்கள் வேதனைப்படுகின்றனர். இந்த புகார் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.