ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புராண கால கோயிலான உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலய திருகல்யான வைபவ திருவிழா கொடியேற்றம் கடந்த 18ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் சந்தன காப்பு அலங்காரத்துடன் மற்றும் வெள்ளி காமதேனு, வெள்ளி மயில், மூஞ்சூறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆலயமாகும் இன்று மாலை விநாயகருக்கு சித்தி புத்தி தேவியருடன் திருமணம் நடைபெற்றது