பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வந்தபோது திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றது. பேருந்தை இயக்க முயன்ற ஓட்டுநர் இயக்க முடியாமல் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, தானியங்கி கதவானது திறக்கப்படாமல் பழுதாகி நின்றது. இதனால் திண்டுக்கல்லில் இறங்க வேண்டிய பயணிகள் சுமார் 20 நிமிடங்களாக பேருந்துக்கு உள்ளேயே இருளில் அமர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.