திரியாலம் பகுதியைச் சார்ந்த அருள் மகன் மோசிக்கிரன் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் LKG படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளியே மோசிக்கிரன் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென வந்த தெரு நாய் சிறுவனை கடித்து குதறி உள்ளது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் நாயை விரட்டி அடித்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.