திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் தற்போது 140 மாணவ மாணவிகள் பூச்சி நாயக்கன்பட்டி, ஜின்னா நகர், பேகம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு இதே பள்ளியில் பணி செய்த கிறிஸ்டினா விமலா ராணி மீண்டும் இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக இப்பகுதி பெற்றோர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம்.