குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலும் திருநெல்வேலி இல் இருந்து செங்கோட்டை வரும் பயணிகள் ரயிலும் மிகவும் கால தாமதமாக மாலை 3 45 மணிக்கு மேல் வருவதால் இரண்டு ரயில்களிலும் செங்கோட்டைக்கு வரும் பயணிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர் குருவாயூர் மதுரை ரயில் தாமதமாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருவதின் காரணமாக திருநெல்வேலி செங்கோட்டை பயணிகள் ரயில் தென்காசி செங்கோட்டைக்கு இடையே நடுவழியில் நிறுத்தி வைக்கப்படும் சூழல் தினமும் தொடர்ந்து வருகிறது