நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள ஆவின் டீக்கடையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5 பேர் மதுபோதையில் வந்து ஓசியில் டீ மாஸ்டரின் டீ கேட்டுள்ளனர். டீ மாஸ்டர் கொடுக்க மறுத்ததால் டீ மாஸ்டரை பட்டாகத்தியால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனம் மற்றும் பட்டாக்கத்தியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் பட்டாக்கத்தி மற்றும் இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்து இது தொடர்பாக விசாரணையில் குணா என்பது தெரியவந்துள்ளது.